ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் டோக்கியோவில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற நிலையில் அங்கு இருப்பவர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கிய ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதால் சக வீரர்கள் பீதி அடைந்துள்ளனர்.