தேசிய அளவிலான நடை பந்தயப் போட்டி (RaceWalk) ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் 20 கிலோ மீட்டர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த வீராங்கனை பாவ்னா ஜத் பங்கேற்றார்.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர், இலக்கை 1 மணி நேரம் 29 நிமிடங்கள் 59 நொடிகளில் கடந்து ஏழாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன்மூலம், இந்தப் பிரிவில் குறைந்த நேரத்தில் இலக்கை கடந்த வீராங்கனை என்ற சாதனை படைத்தது மட்டுமின்றி, டோக்கியோவில் நடைபெறவுள்ள மகளிர் 20 கிலோமீட்டர் நடை பந்தயப் போட்டிக்கும் அவர் தகுதிபெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற நிர்ணயிக்கப்பட்ட (1 மணி நேரம் 31 நிமிடங்கள்) நேரத்தை விட இவர் குறைவான நேரத்தை எடுத்துகொண்டார்.
Bhawna Jat qualified for the 2020 Olympics after setting a new national record in the 20km race walk category at the National Championships.#Athletics #Tokyo2020 #Olympics2020 pic.twitter.com/slWWtx5GI6
— Doordarshan Sports (@ddsportschannel) February 15, 2020