Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன்… மோடி கலந்துரையாடல்….!!!

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் ஜூலை 13ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடன் பிரதமர் மோடி வருகிற ஜூலை 13-ஆம் தேதி உரையாட உள்ளார். காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கலந்துரையாடல் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |