Categories
உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற சீனா….!!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஷ்யா 2-வது இடத்தையும்  சுவிட்சர்லாந்து  3-வது இடத்தையும் பிடித்தன.

Categories

Tech |