Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில்…. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு…. பிசிசிஐ அறிவிப்பு…!!!

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் முன்னேற்றம் தொடங்கியுள்ளது என்றே கருதலாம். இந்நிலையில் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ. 25 லட்சமும், ஹாக்கி அணிக்கு 1.25 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |