பிரிட்டன் குத்துசண்டை வீரர் பென் விட்டேக்கர் டோக்கியோ ஒலிம்பிக்கில் கியூபாவின் ஆர்லன் லோபஸிடம் ஆடவர் குத்துசண்டை 61 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் தோற்றதால் தனது வெள்ளிப் பதக்கத்தை மேடையில் அணிய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விட்டேக்கர் மேடையில் அழுது கொண்டு பதக்கத்தை தனது பாக்கெட்டில் அடைத்தார். இதுகுறித்து பேசிய அவர், தான் தங்கப் பதக்கம் வெல்லாததை ஒரு தோல்வியாக பார்ப்பதாக கூறினார். ஆனால் அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்ட அவர் வெற்றி பெற்ற கியூபாவை சேர்ந்த ஆர்லென் லோபசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Categories