Categories
தேசிய செய்திகள்

“டோலோ 650” மாத்திரைகள்….. ரூ.1000 கோடி லஞ்சம்…. வெளியான பகீர் பின்னணி….!!!!

பெரும்பாலும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் டோலோ மாத்திரைகளை பரிந்துரை செய்வதற்கு மருத்துவர்களுக்கு ஆயிரம் கோடி மதிப்பிலான இலவச பொருள்களை நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளதாக தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை விநியோகம் செய்வதற்காக அதை தயாரிக்கும் நிறுவனங்கள் முறைகேடான வழிமுறைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய இந்திய மருத்துவ பிரதிநிதிகள் கூட்டமைப்பு மருந்து விநியோகத்தில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சினை என்றும் இது தொடர்பாக மத்திய அரசு ஒரு வார காலத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |