ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் ட்ரம்ப் வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று அவரின் கணக்கை நிரந்தமாக முடக்கிவிட்டது.
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஜோபிடனின் வெற்றி அறிவிப்பை தடுப்பதற்காக ட்ரம்பின் ஆதரவாளர்கள் முயன்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் அமைதியாக வீடு தருமாறு கேட்டுள்ளார். அதனோடு அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை நான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். பெரும்பாலும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.
மேலும் பல தவறான கருத்துக்களையும் தன் ட்விட்டர்பக்கத்தின் மூலமாக பதிவு செய்துள்ளார். எனினும் இவருக்கு ட்விட்டரில் 88.7 மில்லியன் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவியுள்ளார். அதன்பின்பு அனைத்துமே மோசடி மற்றும் முறைகேடு என்றே பதிவு செய்து வந்துள்ளார். மேலும் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்கும் ஜோபிடன் அறிவிக்கப்படும் நாளன்று தன் ஆதரவாளர்கள் அனைவரும் தலைநகரான வாஷிங்டனில் கூட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதனால் இனிவரும் நாட்களிலும் டோனால்ட் டிரம்ப்பால் கலவரம் உண்டாகக்கூடும் என்று ட்விட்டர் அவரின் கணக்கை முடக்கியுள்ளது. மேலும் அவரின் கணக்கு முடக்கப்படுவதற்கு முன்பு வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெற்றி நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இவ்வளவு நாட்களாக மோசமாக மற்றும் அநியாயமான முறையில் பெரிய தேசபக்தர்களிடமிருந்து தங்கள் வெற்றி மோசமான முறையில் பறிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் குடியிருப்பிற்கு அமைதியாக திரும்புங்கள் ஆனால் இந்த நாளை வாழ்க்கையில் மறக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.