Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் திட்டம் இது தான்…. ஈரானுக்கு எதிராக போர் விமானங்கள்…. உருவாகும் பதற்றம்…!!

ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் நாட்டிற்கு எதிராக போர் விமானங்களை அனுப்பியுள்ளது பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை குறிவைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஈரானுடன் போருக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி, தற்போது போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் வரும் ஜனவரி மாதம் பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ப்பதற்கு முன்னர் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கலாமா? வேண்டாமா? என்று டிரம்ப் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது ஈரானுடனான உறவில் கடும் விரிசல் மற்றும் கடுமையான மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக ஈரானை குறிவைத்து எச்சரிக்கும் வகையில் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் இரட்டை நிலைத் தன்மையை விமர்சித்த ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமினி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏவுகணைகளை வைத்திருக்கும்போது எங்களை மட்டும் ஏன் வைத்திருக்கக் கூடாது என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

முதலில் அமெரிக்கா தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பது பயனற்றது என்பதை நாடுகள் உணரும் வரை ஈரான் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கும். மேலும் அமெரிக்காவுடன் சுமூக பேச்சு வார்த்தைக்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. மேலும் அமெரிக்கா எங்கள் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகிறது” என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

Categories

Tech |