அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்து வணங்கி வந்த இந்தியர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜங்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா இவர் சென்ற வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 6 அடி உயரத்தில் சிலை ஒன்றை நிறுவினார். அதன் பிறகு தினமும் தீவிர பக்தனாக டிரம்பை வழிபட்டு வந்துள்ளார். கடந்த வருடம் இந்தியாவிற்கு ட்ரம்ப் வந்தபோது பேட்டியளித்த புஸ்சா கிருஷ்ணா கூறுகையில், “இந்தியாவுக்கு எனது கடவுள் வந்ததை நினைத்து பெருமைப் படுகின்றேன். நான் அவரை கடவுளாக தான் வணங்குகிறேன்.
அவரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்து உள்ளார்” என கூறினார் இந்நிலையில் மேடக் மாவட்டத்தில் இருந்த தனது உறவினர் வீட்டிற்கு சென்ற புஸ்சா கிருஷ்ணா திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது மரணம் குடும்பத்தினர் மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.