ட்ரம்ப் அமெரிக்காவை அழிவு பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் என்று ஈரான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோ பைடனை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இதனை தடுக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர்புகை குண்டுகள் வீசுதல் மற்றும் தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை காரணமாக 4 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்காக உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி இதற்கு கண்டனம் தெரிவித்து கூறுகையில், நாம் அனைவரும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று கண்டது மேற்கத்திய ஜனநாயகம் எவ்வளவு வலுவிழந்தது மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகையில் உள்ளது என்பதையே காட்டுகிறது. மேலும் கடந்த நான்கு வருடங்களுக்குள் நாட்டையே ட்ரம்ப் அழிவு பாதையைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் அடுத்ததாக வெள்ளை மாளிகைக்குள் வருபவர் இதன் மூலம் பாடம் கற்றிருப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும் புதிதாக வருபவர்கள் அமெரிக்காவை மீட்க வேண்டும் ஏனெனில் அமெரிக்கா சிறந்த நாடு என்று தெரிவித்துள்ளார்.