Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் செய்த தவறை ஜோபைடன் செய்யவில்லை… அவருடன் இணைய தயார்… அதிரடியாக அறிவித்த நாடு..!!

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் இணைய ஈரான் வெளிவிவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஈரானின் வெளிவிவகார அமைச்சரான ஜாவத் சாரீப், அமெரிக்காவுடன் புதிய உறவை உருவாக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் நிறைவேற்றிய நிர்வாக கொள்கைகள் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அந்த கொள்கைகளை பயன்படுத்தவில்லை என்பதே ஆறுதல் அளிக்கிறது. மேலும் அமெரிக்கா எங்களின் எதிரி இல்லை. மேலும் இந்த உறவினால் அமெரிக்காவிற்கும் புதிய வாய்ப்புகளும் அமையும்.

இதனால் அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகத்துடன் நாங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜோ பைடன் அரசு ஈரான் தங்களின் விதிமுறைக்கு  உட்பட்டால் அணு ஆயுதத்தில் இணைய தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் எங்களுக்கும்  ஈரானுக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்த சிறந்த வாய்ப்பு இது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |