ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி ட்விட் செய்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் தோல்வியை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். பைடன், ஹாரிஸ் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்து கொண்டு ஷாம்பியான் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.
அதோடு ட்ரம்பின் மருமகள் மேரி எல் “அனைவரும் நன்றாக உறங்குங்கள். இறுதியாக நம்மால் முடிந்தது. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். எழுத்தாளர் மற்றும் தொழில் அதிபரான இவர் வெளிப்படையாக ட்ரம்பை விமர்சிப்பவர்களில் ஒருவராவார். ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றியும் புத்தகம் ஒன்று இவர் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
To America. Thanks, guys. pic.twitter.com/FwC5OoCKxx
— Mary L Trump (@MaryLTrump) November 7, 2020