Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ட்ரான் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம்”…. தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு பயிர்களுக்கு ட்ரோன் மூலம் எப்படி உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் பா.கிள்ளனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களுக்கு ரோன் மூலமாக உரம் எப்படி தெளிப்பது என்பது பற்றி செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார்.

பின் செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து உரம் தெளிக்கும் பணியை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ட்ரான் மூலமாக எப்படி உரம் தெளிப்பது என்பது பற்றி செயல் விளக்க பயிற்சி அளிக்கபட்டது. மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண்துறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர். இந்த முகாமில் அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |