திமுகவினர் ஆரம்ப காலத்தில் ட்ராமா கம்பெனி நடத்தி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்ததை போல, தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதையே செய்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செய்யப்படவில்லை எனவும், ஆதாரமின்றி அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், தொடர்புடைய அதிகாரிகள் விசாரணை செய்து தெரிவிக்கட்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தன் மீது உள்ள தவறை மறைக்க அதிமுக மீது குறை சொல்லக்கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.