கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ட்ரிபிள் லாக்டவுன் திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. இருப்பினும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிகரித்துச் செல்லும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை ஆரம்ப காலகட்டத்திலேயே தடுப்பதற்காக ட்ரிபிள் லாக்டவுன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அப்பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று வெளியே வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டதுடன், அனுமதி இன்றி வெளியே வருபவர்கள் 14 நாட்கள் அரசு சொல்லும் முகாமில் தனிமைப் படுத்தப் படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.