ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் எலன் மஸ்க் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனும் விதிமுறையை எதிர்த்து அவர்கள் அனைவரும் “சுதந்திர தின அணிவகுப்பு” என்ற பெயரில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு எலன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பின் சில மணி நேரம் கழித்து அவர் நீக்கம் செய்து விட்டார்.இதன் காரணமாக எலன் மஸ்க் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.