இணையத்தை கலக்கி வரும் என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு சீரியல் நடிகை ஆலியா மானசா நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் தெருக்குரள் அறிவு இருவரும் பாடி நடித்துள்ள பாடல் என்ஜாயி எஞ்சாமி . வித்தியாசமான இந்த ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது . இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீரியல் நடிகை ஆலியா மானசா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் இதை தனது செல்ல மகள் ஐலாவின் முதல் பிறந்தநாள் தினத்திற்கு டெடிகேட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். புடவை கட்டி ஆல்யா மானசா அசத்தலாக நடனம் ஆடியுள்ள இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.