விழுப்புரத்தில் ட்ரையல் பார்ப்பதாக கூறி விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ப்ளூ ஸ்டார் ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலையம். அங்குள்ள தொலைபேசி எண்ணை 9 ஆம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சஞ்சிவ் என்றும், தாம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் தனக்கும் தனது நண்பர் மனோஜ் என்பவருக்கும் 2 என்பீல்டு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்றும் அதைடிரையல் ஓட்டி பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் .
இதன்படி அன்று மாலை நண்பருடன் வந்து இறங்கிய அவரை நம்பிய ஷோரூம் ஊழியர் மோகன்தாஸ் வாகனத்தையும் தலைகவசத்தையும் கொடுத்துள்ளார்.இதனையடுத்து என்ஃ பில்டு பைக்கையும் அவர் எடுத்துக்கொண்டு புறப்பட காரில் இருந்த நபரும் புறப்பட்டார் . திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் என்ஃபீல்டு நிற்க்கவே மறுபடியும் மோகன்தாஸ் தொடர்பு கொண்டு உதவி கூறியுள்ளார்.
இதனை நம்பி பெட்ரோல் வாங்கி சென்று வண்டியில் ஊழியர்கள்பெட்ரோலை ஊற்றியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் வருவதாக புறப்பட்ட அவரும் காரில் இருந்த நபரும் திரும்பி வரவே இல்லை சுமார் ஒரு மணி நேரமாக இருந்த ஊழியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர், அவர் அறிவித்த வாகன லைசென்ஸ், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார், என அனைத்தும் போலியானது என்பதும், சிசிடிவி முகம் தெரிய கூடாது என தொப்பி அணிந்து வந்தது, தனது செல்போன் என தெரிவித்து மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவரின் செல்போன் எண்ணை கொடுத்ததும், கண்டுபிடிக்கப் பட்டது .இதனையடுத்து மோட்டார் சைக்கிள் திருடிய நபர், காரில் வந்து உதவிய நபர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.