ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து டிரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கும் ஊரக பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ மேப்பிங், ஷிப்மென்ட் ரூட்டிங், டிராக் அண்ட் டிரேஸ் லொகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இவை அனைத்தையும் கடந்த ஆண்டுகளாக ப்ளிப்கார்ட் உருவாக்கி வந்தவை ஆகும். இந்த திட்டம் மூலம் மாநிலத்தினுள் சாலை மூலம் விரைவில் சென்றடைய முடியாத ஊரக பகுதிகளில் மருந்துகளை வேகமாக வினியோகம் செய்ய முடியும். திட்டத்தை செயல்படுத்தும் முன் இதனை 6 நாட்களுக்கு சோதனை செய்யப்பட இருக்கிறது.