Categories
உலக செய்திகள்

“ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றம் கொண்டு வர புதிய குழு”… எலான் மஸ்க் அதிரடி ஏற்பாடு…!!!!!

ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு புதிய குழு ஒன்றை எலான் மஸ்க் ஏற்பாடு செய்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். ட்விட்டரின் உரிமையாளர் பற்றி எலான் மஸ்க் பேசும்போது இந்த நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை மனித குலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமாக ட்விட்டரை வாங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். எலான் மஸ்க் உரிமையாளரான பின் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களுக்காக தடை செய்யப்பட்ட பலர் மீண்டும் ட்விட்டருக்கு வருவதற்காக கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

இந்த சூழலில் twitter in உள்ளடக்கத்தில் மாற்றம் கொண்டு வர புதிய குழுவை எலான் மஸ்க்  ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, twitter ல் உள்ளடக்க மறு சீரமைப்பு கவுன்சில் உருவாக்கப்படும். மேலும் பல தரப்பட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட உள்ளடக்க மதிப்பாய்வு கவுன்சிலிங் ட்விட்டர் உருவாக்கும் மதிப்பாய்வு கவுன்சில் கூடுவதற்கு முன் எந்த ஒரு பெரிய உள்ளடக்க முடிவுகள் அல்லது முடக்கப்பட்ட கணக்கு மறுசுயமைப்புகள் எதுவும் நடைபெறாது. மேலும் twitter in உள்ளடக்க மறு சீரமைப்பு கொள்கைகளில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |