ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். அந்த வரிசையில் உயரதிகாரிகள் நீக்கம் உள்ளிட்ட பல இன்னொரு அதிரடியையும் மஸ்க் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட (verified) கணக்கு வைத்திருப்பவர்களிடம் இனி மாதம் $20 (இந்திய மதிப்பில் 1600) ட்விட்டர் நிர்வாகம் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ் பெற்றவர்கள் உள்ளிட்டவர்களின் டுவிட்டர் பக்கம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் விதமாக ப்ளூ டிக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட நபருடைய அதிகாரப்பூர்வ கணக்கு எனில் அதன் அடையாளமாக புளு டிக் இருக்கும்.