தனுஷ் ட்விட்டரில் 11 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திரை உலகிற்கு வந்த போது பலராலும் கேலி செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது விடாமுயற்சியால் வெற்றி பெற்று தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 11 மில்லியனை தொட்டு உள்ளது. இதைப் பற்றி தான் அவரின் ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.