உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்துள்ளார்.
இந்தியரான பரக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது பற்றி சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பராக் அகர்வாலுக்கு இழப்பீடாக ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 346 கோடி ரூபாய் கிடைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாக twitter போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நிர்வாக மாற்றத்தினாலோ பணிநீக்கம் செய்யப்பட்டாலோ வேலை நீக்க ஊதியம் பகிரப்படாத பங்குகள் போனஸ் என பலவற்றை பெறுகின்றார்கள். அந்த வகையில் பராக் அகர்வாலுக்கு இழப்பீடாக 346 கோடி கிடைக்கலாம் என ஆங்கில ஊடகங்கள் செய்து வெளியிட்டு இருக்கிறது. மேலும் twitter நிறுவனத்தில் அகர்வாலின் ஈக்விட்டி பங்குகள் மற்றும் அடிப்படை ஊதியத்தின் ஆண்டு வருவாய் போன்றவற்றை மதிப்பீட்டு இந்த தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.