Categories
உலகசெய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க்… அதிகாரிகளை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து அதிரடி…?

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளை அடுத்தடுத்து அதிரடி பணி நீக்கம் செய்துள்ளார்.

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் ட்விட்டரை தான் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை இல்லை நானே வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கை கழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள்ள அர்த்தங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதாவது நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன் அது மூழ்கட்டும் என பதிவிட்டு இருக்கிறார்.

let that sink in! என்ற அவருடைய ட்வீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் இதனை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை கூறியுள்ளது ஆனால் எலான்மஸ்க் தரப்போ,  twitter தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்கள் பற்றி உறுதி செய்யவில்லை.

Categories

Tech |