உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாதந்தோறும் பயனர்கள் 1600 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த செய்தி ட்விட்டர் பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ப்ளூ டிக் வழங்கப்பட்ட பிறகு 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் பயனர்களின் ப்ளூ டிக் மீண்டும் பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மிக முக்கிய அறிவிப்பாக ட்விட்டரின் ப்ளூ டிக்கை வெவ்வேறு வண்ணங்களில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் நாட்களில் கலர் கலராக டிக் வழங்கப்படும்.