Twitter நிறுவனம் சிறார் ஆபாச படங்களை வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறார் ஆபாச திரைப்படங்களை பதிவிட்டதற்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் சுமார் 44 ஆயிரத்து 611 கணக்குகளை முடக்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து 52,141 கணக்குகள் ஆபாச படங்களை வெளியிடுவதற்காக முடக்கப்பட்டது.
உலக பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியவுடன் ஆபாச படங்களை பதிவிடும் கணக்குகளை முடக்கும் செயல்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவரின் கணக்குகளும் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.