பிரஜின்-சாண்ட்ரா தம்பதியினர் தங்களது அழகிய இரட்டை குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை சாண்ட்ரா நடிகர் பிரஜினை திருமணம் செய்து கொண்டார். நடிகர் பிரஜின் காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஜின்-சாண்ட்ரா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்தனர். இந்நிலையில் பிரஜின்- சாண்ட்ரா தம்பதியினர் தங்களது அழகிய இரட்டை குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.