Categories
இந்தியா

தகனம் செய்ய இடமில்லை…! சடலங்களுடன் வசிக்கும் உறவினர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்கள் தகனம் செய்ய இடமில்லாத காரணத்தினால் வீட்டில் வைத்து அவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் பல இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் முக்கியமாக டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களுடைய சடலங்களை தகனம் செய்ய இடம் இல்லாத காரணத்தினால் அவர்களுடைய உறவினர்கள் இறந்தவர்களுடைய உடலை வீட்டில் வைத்து இறந்தவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Categories

Tech |