Categories
மாநில செய்திகள்

“தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற டிரைவர்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

சென்னை செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் லாரிகள் நிறுத்தும் யார்டு இருக்கின்றது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் தங்களது லாரிகளை  நிறுத்துவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் யார்டில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமலகண்ணன், குமரன், நவீன் போன்றோர் யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் கீழ் அமர்ந்து மது குடித்தனர். மது போதையில் இருந்த மூவரும் அங்கிருந்து எழுந்து போகாமல் தகராறில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து லாரியை எடுக்க உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் கன்னையா, கிளீனர் கிரிஷ்குமார் போன்றோர் வந்தனர். அவர்கள் லாரியை எடுக்க வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது போதையில் இருந்த கமலக்கண்ணன், குமார், நவீன் போன்றோர் டிரைவர், கிளீனர் போன்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து நகர முடியாது உன்னால் என்ன செய்ய முடியும் என ஆபாச வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் லாரி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.  இதனால் கன்னையா  சிங்  ஆத்திரமடைந்தார். லாரியை எடுக்கப்போவதாக  லால் சிங் அவர்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் அவர்கள் முடிந்தால் லாரியை எடு பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் லாரியை ஏற்றி கமலக்கண்ணன், குமரன், நவீன் போன்றோர் மீது ஏற்றி இறக்கி அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.

இந்த விபத்தில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். உடனடியாக குமரன், நவீன் போன்றோரை  மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார். நவீன் கவலைக்கிடமாக இருக்கின்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக தனிப்படை அமைத்து தப்பி சென்ற லாரி டிரைவர் கன்னையா  சிங் மற்றும் கிருஷ்ணகுமார் போன்றோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்துள்ளனர். இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதையில் ஆபாசமாக பேசி எங்களை தீண்டியதால் லாரி ஏற்றிக் கொன்றேன்  என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |