பெண் வழக்கறிஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(31) என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பார்வதியின் அக்காள் கணவரான கருணாகரன் என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பார்வதி, அவரது தாய் ராணி, தங்கை ஜெயந்தி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கருணாகரன் பார்வதியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பார்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.