Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மகன்கள்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் ஆடையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனரான சீரங்கன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து ராஜேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இருவரும் சூரப்பள்ளி சோரையான் வளவு பகுதியில் வசித்து வந்துள்ளனர். முதல் மனைவி மூலம் சீரங்கனுக்கு சரவணன்(35), ராஜ்குமார்(31) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக சீரங்கனுக்கும், அவரது மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபமடைந்த மகன்கள் சீரங்கனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சீரங்கனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சீரங்கனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் சரவணன், ராஜ்குமார் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |