Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மாமனார்…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி புதுதெருவில் பாக்யராஜ்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் விஷ்ணு தேவி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மேனகா ஆஷா(1) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு தேவியின் மாமனார் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கார்டை கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு தேவி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஷ்ணு தேவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஷ்ணு தேவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |