Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்….. தட்டி கேட்ட போலீஸ்காரர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

போலீஸ்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காத்திருப்பு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள எடையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். தற்போது சக்திவேல் கடற்கரை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சக்திவேல் காத்திருப்பு கிராமத்தில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் நின்று கொண்டிருந்த போது சில வாலிபர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை சக்திவேல் தட்டிக் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சக்திவேலை அந்த வாலிபர்கள் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ், தட்சணாமூர்த்தி, அருள், சக்தி ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |