Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழநெம்பன்கோட்டை கிராமத்தில் விஷ்ணு ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை முன்விரோதம் காரணமாக அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுராஜாவை கைது செய்து பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு விஷ்ணுராஜவை  குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுராஜாவை  திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |