Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் தடிவீரன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ஆகாஷ் என்பவருடன் நெல்லை டவுன் வடக்கு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்து பாண்டி என்பவர் அங்கு சென்று குமாருடன் தகராறு செய்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |