மருமகன் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன் விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரில் விவசாயியான துலுக்கானம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூரணம்(56) என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான ஜெயந்திக்கு அதே பகுதியில் வசிக்கும் டார்ஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயந்திக்கும் டார்ஜனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை துலுக்கானம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த டார்ஜன் தனது மாமனார் மற்றும் மாமியாரை கட்டையால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் படுகாயமடைந்த துலுக்காணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்தால் போலீசார் விவசாயியின் உடலை மேட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சம்பூரணத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டார்ஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.