Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தகர்க்கப்பட்ட ராட்சத பாறை….. தொடங்கிய மலை ரயில் பயணம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தண்டவாளத்தில் கிடந்த பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பிறகு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஹல்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விட்டது. இதனால் ரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டவாளத்தில் கிடந்த பாறையை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த ராட்சத பாறையை ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்து விட்டனர்.

இதனை தொடர்ந்து சீரமைக்கப்பட்ட மலை ரயில் பாதையை ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அதன்பிறகு பாதுகாப்பை உறுதி செய்து மலை ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் இன்று முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Categories

Tech |