தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல்செய்த பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை பின்வருமாறு:
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21இல் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் திருச்சியில் 40 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் நிறுவப்படும்.
அரசு சேவைகளைத் தடையின்றி வழங்கவும் அனைத்து அரசு துறைகளுக்கும் ஒரே மாதிரியான தரவுகள் கிடைக்க உதவும் வகையிலும் தமிழ்நாடு மாநில குடும்பத் தரவுத்தளம் உருவாக்க 47.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.