கர்நாடக மாநிலத்தில் மனைவியே தன் கணவரை மரக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி என்ற மாவட்டத்தில் பெல்காம் அருகே உள்ள அஞ்சனா என்ற கிராமத்தில் சச்சின் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அனிதா வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்துள்ளார். அதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வழக்கம் போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் அனிதா ஒரு மரக்கட்டையை எடுத்து கணவர் சச்சின் தலையில் பலமாக அடித்துள்ளார். அதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து எருமை ஒன்று உயிரிழந்து விட்டதாக கூறி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து உடலை அடக்கம் செய்வதற்கு அனிதா குழி தோன்றியுள்ளார். அதன்பிறகு தனது சகோதரர் மற்றும் சகோதரி, நண்பர் ஆகியோர் உதவியுடன் தன் கணவரின் உடலை யாருக்கும் தெரியாமல் அனிதா அடக்கம் செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த நிபானி கிராம காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மனைவியே கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.