Categories
தேசிய செய்திகள்

தகாத உறவு…. “அப்பாட்ட சொல்லாத” மிரட்டிய தாய்…. கேட்காத 6 வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கள்ளக்காதலனுடன் இருந்ததை கணவனிடம் கூறியதால் பெற்ற தாயே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் காந்தா மாவட்டத்தில் ராஜுல் என்ற பெண் தனது கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவருக்கு  6 வயதில் ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் தாய் வேறு நபருடன் வயல்வெளியில் இருந்ததை ராஜூலின் மகன் பார்த்துவிட்டான். இதனைப் பார்த்த தாய் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார். ஆனால் சிறுவன் தந்தையிடம் தாய் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் தந்தை ராஜூலை  கண்டித்துள்ளார்.

தனது பேச்சை மீறி மகன் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்த ராஜுல் தனது மகன் என்றும் பாராமல் கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்து ஆற்றங்கரையில் சடலத்தை வீசியுள்ளார். சடலத்தை  பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாய் தான் சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜூலையும் அவரது கள்ளக் காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |