Categories
சினிமா தமிழ் சினிமா

“தகாத வார்த்தைகளால் ரசிகர்களிடையே மோதல்”…. முகம் சுளிக்கும் மக்கள்…. பிரபல நடிகர்களின் ரசிகர்கள்….!!!

சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது அனைவருக்கும்  சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்னதான் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் இப்படம் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கின்றது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை கலாய்த்து விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல ஆண்டுகாலமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகத்தளங்களில் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

அக்காலத்தில் எம். ஜி. ஆர்-சிவாஜி, அதன் பின் ரஜினி -கமல் என போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டு வருவது இயல்பான ஒன்று. அந்த வரிசையில் தான் அஜித் மற்றும் விஜய்யும் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டனர். சமகால நடிகர்களான இவர்கள் ஒரே காலகட்டத்தில் சினிமாத்துறையில் அறிமுகமாகினர். அஜித் ஆரம்பகாலகட்டத்தில் இருவரையும் இளம் நடிகர்களாகவே பார்த்த சினிமா ரசிகர்கள் போகப்போக இருவரையும் போட்டியாளர்களாக பார்த்தனர். விஜய் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்தால் அஜித் காதல் மன்னன் படத்தில் நடிப்பார். அஜித் வாலி படத்தில் நடித்தால் விஜய் ப்ரியமுடன் படத்தில் நடிப்பார்.

இவ்வாறு அவர்களுக்குள் பனிப்போர் இருத்து வந்ததாக பல சினிமாத்துறையை சார்ந்தவர்களே பேசியிருக்கின்றனர். இருந்தாலும் திரைக்கு பின்னால் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு இவர்களின் ரசிகர் பட்டாளம் அதிகரிக்க பல இடங்களில் இவர்களின் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தற்போது நேருக்கு நேர் மோதுவது குறைந்தது என்று ஆறுதல் பட்டாலும் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது அனைவர்க்கும் சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |