தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானிய பொருட்கள்இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டும் அல்லாமல் அரிசி, பருப்பு, கோதுமை, போன்ற பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் அனைத்தும் கிடைக்கின்றது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் ரேஷன் தொடர்பான சலுகைகளை பெற முடிகிறது. ஆனால் மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்யும் குற்றங்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகிறது.
இந்த நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்காமல் போவதையும் தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தடுப்பதற்காகவும் மத்திய அரசு முடிவு செய்து இருக்கின்றது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு ரேஷன் கார்டு விதிமுறைகளை மாற்றி வருகின்றது. அதாவது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும், பொருளாதார ரீதியாகவும், மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் உதவுவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அதிக வசதி படைத்தவர்கள் இதனை பயன்படுத்த முடியாது அதனால் இந்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தற்போது நாடு முழுவதும் வந்துவிட்ட நிலையில் ரேஷன் கார்டு விதிமுறைகளை அரசு கடுமையாக்கி வருகின்றது. சில வரையறைகளின் அடிப்படையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் குடும்ப வருமானம் வசதி போன்றவற்றை வைத்து தகுதியுடையவர்களுக்கு இனி ரேஷன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான விதிமுறைகளும் அதற்கான அறிவிப்பும் இன்னும் தமிழக அரசிடம் இருந்து வெளியாகவில்லை. அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் தான் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் வருடத்திற்கு மூன்று லட்சத்திற்கும் மேலிருப்பவர்கள், ஆயுத உரிமை வைத்திருப்பவர்கள் போன்றவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள வரையறைக்கு உட்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் இவர்களின் ரேஷன் கார்டு அரசு ரத்து செய்துவிடும் என கூறப்பட்டு வருகின்றது மற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம். ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தோ இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.