Categories
மாநில செய்திகள்

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு..!!

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. 96 வயதாகும் ஆர். நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். சுதந்திர தின விழாவில் ஆர். நல்லகண்ணுவிற்கு விருது வழங்கி கௌரவிக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழகத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து மாபெரும் பங்காற்றி, பணியாற்றி வரக்கூடிய மூத்த தலைவர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணுவிற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்படுகிறது.

ஆர். நல்லகண்ணு 25 ஆண்டுகளாக விவசாய, தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராகவும், தற்போது மத்திய கமிட்டி உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவராகவும் நல்லகண்ணு இருந்து வரும் நிலையில், தகைசால் தமிழர் விருது கிடைக்க இருக்கிறது.

Categories

Tech |