Categories
மாநில செய்திகள்

தக்காளி காய்ச்சல்: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக சர்க்கரை நோய் பரிசோதனை திட்டத்தினை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்பாக வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு இருக்கும் புது துணைசுகாதார நிலையத்தினை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தபோது ”கேரளாவில் பரவி இருக்கும் தக்காளி காய்ச்சல் காரணமாக பெரியளவில் பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் யாருக்கும் இத்தகைய வைரஸ் இல்லை என்றபோதிலும் கூட கேரள தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்பது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் 10 வருடகால அதிமுக ஆட்சியில் இந்த மருத்துவமனையில் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ளாமல் சீரழித்தனர். இத்தகைய சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஒரு கட்டிடத்தை திறந்து வைத்து பல மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் இருதய நோய்க்கு சிகிச்சையளிக்கும் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் உடைய தீவிர சிகிச்சை பிரிவு ரூபாய் 23.75 கோடி மதிப்பீட்டில் அமையஉள்ளது. திருவிழிமிழலை, வடுவூர், முத்துப்பேட்டை, வட்டார அளவிலான பொது சுகாதார மையங்கள் ரூபாய் 3.23 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட இருக்கிறது. திருவாரூரில் 2 துணை சுகாதார நிலையங்கள் தலா ரூபாய் 32 லட்சம மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட இருக்கிறது. மேலும் ஆய்வகம் பரிசோதனைக்காக ரூபாய் 8.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள 60 துணை சுகாதார நிலையங்களை நலவாழ்வு மையங்களாக மாற்றியமைப்பதற்கு ரூபாய் 17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Categories

Tech |