Categories
தேசிய செய்திகள்

தக்காளி காய்ச்சல்: பொதுமக்கள் பயப்பட வேண்டாம்…. சுகாதாரத்துறை மந்திரி பேட்டி….!!!!

கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணாஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “இம்மாநிலத்தில் சில மாவட்டங்களில் தக்காளிகாய்ச்சல் பாதிப்பானது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஒரு மாவட்டத்தில்கூட இந்நோய் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. மேலும் யாரும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை. இந்த நோய் வாயிலாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும் மூளைக் காய்ச்சல் நோய் ஏற்பட இது காரணம் ஆகும்.

எனவே பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருத்தல் வேண்டும். அதுமட்டுமின்றி இந்நோய் 5 வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளை மட்டுமே தாக்குவதால் அவர்களை பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும். இந்நோய் தோன்றுவதாக ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு இந்நோய் பரவாமல் இருக்க நோய்வாய்பட்டவர்களை தனிமைப்படுத்துதலும், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உடனே உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதும், குழந்தைகளுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வழங்குவதும் முக்கியமாகும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |