சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.