கடந்த சில வாரங்கள் காய்கறிகளின் வரத்து குறைந்த நிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்சமயம் காய்கறி வரத்து அதிகமாக வந்ததால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 10 முதல் 15 வரை குறைந்து காணப்படுகிறது. ஆனால் தக்காளி விலை மட்டும் குறையாமல் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அசானி புயலால் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக வரத்து குறைவு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.