Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை கிலோவிற்கு ரூ.40 குறைவு…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாக நேற்று முதல் தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. நேற்று வரை 120 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளியில் இன்றைக்கு கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்தது. அதனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்தால், தக்காளியின் விலை மேலும் குறையும் என்று சென்னை கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தாலும், மேலும் விலை குறைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |