Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தங்கச்சி என்னை யாரும் தேட வேண்டாம்” வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரியாம்பகோடு பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனை ஸ்டாலினின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “இனி யாரும் என்னை தேட வேண்டாம்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கை மீண்டும் ஸ்டாலினை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில் ஸ்டாலின் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டாலினின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |